உன்னைக் காக்கும் தேவன் தூங்குவதுமில்லை, அயர்வதுமில்லை. இந்த வலைப்பூவை வாசித்து கொண்டிருப்பவரை கத்தர் இயேசு நிறைவாக ஆசிர்வதிப்பாராக.யோசனையில் பெரியவரே ஆராதனை ஆராதனை செயல்களிலே வல்லவரே ஆராதனை ஆராதனை ஓசன்னா உன்னத தேவனே ஓசன்னா ஓசன்னா ஓசன்னா 1. கண்மணி போல் காப்பவரே ஆராதனை ஆராதனை கழுகு போல் சுமப்பவரே ஆராதனை ஆராதனை 2. சிலுவையினால் மீட்டவரே ஆராதனை ஆராதனை சிறகுகளால் மூடுபவரே ஆராதனை ஆராதனை 3. வழி நடத்தும் விண்மீனே ஆராதனை ஆராதனை ஒளி வீசும் விடிவெள்ளியே ஆராதனை ஆராதனை 4. தேடி என்னை காண்பவரே ஆராதனை ஆராதனை தினந்தோறும் தேற்றுபவரே ஆராதனை ஆராதனை 5. பரிசுத்தரே படைத்தவரே ஆராதனை ஆராதனை பாவங்களை மன்னித்தவரே ஆராதனை ஆராதனை 6. உறுதியான அடித்தளமே ஆராதனை ஆராதனை விலை உயர்ந்த மூலைக்கல்லே ஆராதனை ஆராதனை

நொடிக்கு ஒரு பைபிள்

No comments
1949ஆம் ஆண்டு சீனால் பத்து லட்சம் கிறிஸ்தவர்கள் இருந்தனர். 2010ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி அங்கு மொத்தம் 6 கோடியே எழுபது லட்சம் கிறிஸ்தவர்கள் இருந்தனர். சீனாவின் அமிட்டி பைபிள் அச்சுக் கூடம் தான் உலகின் மிக பெரிய அச்சுக் கூடம். அங்கு நொடிக்கு ஒரு பைபிள் தயாரிக்கப்படுகிறது. அதிகாரப்பூர்வமாக சீனா ஒரு மதநம்பிக்கையற்ற நாடு. தாம் கிறிஸ்தவர் என்ற அடையாளத்தை வெளிப்படுத்த பலர் தயங்குவதால் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கையை கணக்கெடுப்பது சிரமம் உள்ளது. 2030ஆம் ஆண்டுக்குள் உலகிலேயே அதிக கிறிஸ்தவர்கள் வாழும் நாடாக சீனா இருக்கும் என்று சிலர் கூறுகின்றன

No comments :

Post a Comment