உன்னைக் காக்கும் தேவன் தூங்குவதுமில்லை, அயர்வதுமில்லை. இந்த வலைப்பூவை வாசித்து கொண்டிருப்பவரை கத்தர் இயேசு நிறைவாக ஆசிர்வதிப்பாராக.யோசனையில் பெரியவரே ஆராதனை ஆராதனை செயல்களிலே வல்லவரே ஆராதனை ஆராதனை ஓசன்னா உன்னத தேவனே ஓசன்னா ஓசன்னா ஓசன்னா 1. கண்மணி போல் காப்பவரே ஆராதனை ஆராதனை கழுகு போல் சுமப்பவரே ஆராதனை ஆராதனை 2. சிலுவையினால் மீட்டவரே ஆராதனை ஆராதனை சிறகுகளால் மூடுபவரே ஆராதனை ஆராதனை 3. வழி நடத்தும் விண்மீனே ஆராதனை ஆராதனை ஒளி வீசும் விடிவெள்ளியே ஆராதனை ஆராதனை 4. தேடி என்னை காண்பவரே ஆராதனை ஆராதனை தினந்தோறும் தேற்றுபவரே ஆராதனை ஆராதனை 5. பரிசுத்தரே படைத்தவரே ஆராதனை ஆராதனை பாவங்களை மன்னித்தவரே ஆராதனை ஆராதனை 6. உறுதியான அடித்தளமே ஆராதனை ஆராதனை விலை உயர்ந்த மூலைக்கல்லே ஆராதனை ஆராதனை

ஓரினச்சேர்க்கையாளர்களின் திருமணத்தை ஆசீர்வாதம் செய்வதில் எந்த தடையும் இல்லை

No comments
ஓரே இனத்தை சேர்ந்தவர்களின் திருமணத்தை ஆசீர்வாதம் செய்வதில் எந்த தடையும் இல்லை என பிரான்ஸ் நாட்டு பெண்டகோஸ்டல் தேவாலயங்கள் அமைப்பு தற்போது அனுமதி வழங்கியுள்ளது.
ஓரினச்சேர்க்கையாளர்களின்(Gays&Lesbians) திருமணத்திற்கு திருச்சபை பாதிரியார்கள் ஆசீர்வாதம் அளிக்க கூடாது என்ற நடைமுறை சில வருடங்களாக வழக்கத்தில் இருந்துள்ளது.
இந்த நடைமுறைக்கு எதிராக ஓரினச்சேர்க்கையாளர்களின் திருமணத்தை ஆசீர்வாதம் செய்த மதகுரு ஒருவரின் பதவியும் சமீபத்தில் பறிக்கப்பட்டது.
இந்நிலையில், ஒரே இனத்தை சேர்ந்தவர்களின் திருமணத்தை மதகுருமார்கள் ஆசீர்வாதிக்கலாமா என்று கருத்து கேட்டு சமீபத்தில் வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட்டது.
Union of Protestant Churches in France" (EPUdF) என்ற அமைப்பை சேர்ந்த 100 முக்கிய பிரதிநிதிகளிடம் நடத்திய இந்த வாக்கெடுப்பில், சுமார் 94 பேர் ஓரினச்சேர்க்கையாளர்களின் திருமணத்தை ஆசீர்வாதிப்பதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த வாக்கெடுப்பிற்கு ஆதரவு தராதவர்களை திருச்சபை குருமார்கள் கட்டாயப்படுத்த மாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புரோட்டஸ்டண்ட் தேவாலயத்தின் இந்த அனுமதி, பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
Alex Rohne என்பவர் கூறுகையில், சில இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகள் மற்றும் நாசிசவாதிகள் போல் ஓரினச்சேர்க்கையாளர்களை கீழ்தரமாக நடத்திவந்த சூழ்நிலை தற்போது மாறியுள்ளது.
திருச்சபைகளின் இந்த நடவடிக்கை ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு ஒரு புதிய நம்பிக்கையை அளித்திருக்கிறது என்றார்.
ஐயர்லாந்து மற்றும் ஸ்கொட்லாந்து நாடுகளும் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு ஆதரவாக வாக்கெடுப்பு நடத்த உள்ள நிலையில், பிரான்ஸ் புரோட்டஸ்டண்ட் தேவாலயங்கள் இந்த அனுமதியை வழங்கியுள்ளது.
பிரான்ஸ் நாட்டிலேயே 1,10,000 உறுப்பினர்களுடன் சுமார் 4,00,000 கத்தோலிக்கர்கள் புரோட்டஸ்டண்ட் தேவாலயங்களின் நம்பிக்கையை பின்பற்றுவர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான விளக்கமான பதிவு காண்க 

உண்மையில் நாம் வாழும் காலம் இறுதி காலமா ? பாகம் 09

No comments :

Post a Comment